புதிய பல்சர் வரவு: பல்சர் 180க்கு விடை கொடுக்க பஜாஜ் ஆட்டோ முடிவு

பல்சர் மற்றும் டிஸ்கவர் பைக்குகள் பஜாஜ் ஆட்டோவின் விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவிர, பல்சர் தற்போது பல்வேறு எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது.
135 சிசி, 150 சிசி, 180 சிசி மற்றும் 220 சிசி எஞ்சின் மாடல்களில் பல்சர் தற்போது கிடைக்கிறது. இதில், 150 சிசி பல்சர் மற்றும் 135 பல்சர் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், 150 சிசிக்கு அடுத்து பல்சர் 220 சிசி மாடல்தான் அதிகம் விற்பனையாகிறது. 180சிசி மாடல் விற்பனையில் பெரிய அளவுக்கு சாதிக்கவில்லை. மேலும், புதிய 200 சிசி பல்சரையும் பஜாஜ் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.
எனவே, பல்சர் 180 மாடலின் உற்பத்தியை நிறுத்திவிட பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, 220 சிசி பல்சர் தொடர்ந்து விற்பனை செய்யவும் பஜாஜ் முடிவு செய்துள்ளது.
ஏனெனில், புதிய பல்சர் நேக்டு ஐ ஸ்டைல் வடிவமைப்பு கொண்டதால், தொடர்ந்து பல்சர் 220 சிசி பைக்கை விற்பனை செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








