விரைவில் மார்க்கெட்டுக்கு வருகிறது புதிய பல்சர்: புனேயில் புக்கிங்

வாடிக்கையாளர் நன்மதிப்பை பெற்றுள்ள பல்சர் பிராண்டில் புதிய பைக்கை விரைவில் பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வருகிறது. முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பு மற்றும் புதிய 200சிசி எஞ்சினுடன் வரும் புதிய பல்சர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதமே விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய பல்சரை இதுவரை மார்க்கெட்டுக்கு விடாமல் பஜாஜ் மவுனம் காத்து வருகிறது.
இந்த நிலையில், புனேயில் உள்ள டீலர்களில் புதிய பல்சருக்கு புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. எனவே, புதிய பல்சர் விரைவில் விற்பனைக்கு வருவது உறுதியாகிவிட்டது. ரூ.94,280 விலையில் புனேயில் புதிய பல்சர் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 ஸ்பார்க் ப்ளக் கொண்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட எஞ்சினுடன் வரும் புதிய பல்சரில், கேடிஎம் ட்யூக் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே, 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான் பொருத்தப்பட்டிருக்கிறது.
புதிய பல்சர் அதிகபட்சம் 23.5 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். 145 கிலோ எடை கொண்டதாக இருக்கும் புதிய பல்சர் மணிக்ுக அதிகபட்சம் 136 கிமீ வரை பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 9.8 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை இதன் எஞ்சின் எட்டிப் பிடிக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








