பழைய 100சிசி பாக்ஸரை மீண்டும் களமிறக்க பஜாஜ் முடிவு

Boxer 100
பழைய 100சிசி பாக்ஸரை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளது. தற்போது 100 சிசி பாக்ஸரின் சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பஜாஜ் ஆட்டோவின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்று பாக்ஸர். ஆனால், வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்தை நாடி பிடித்து பாக்ஸர் விற்பனையை பஜாஜ் நிறுத்தியது. அதற்கு பதில் 100சிசி பிரிவில் பிளாட்டினா மற்றும் டிஸ்கவர் பைக்குகளை விற்பனை செய்ய துவங்கியது.

இந்த நிலையில், அதிக சந்தை வாய்ப்புள்ள 100சிசி ரக பைக் மார்க்கெட்டில் தன்னை பலப்படுத்திக் கொள்ள பஜாஜ் முடிவு செய்துள்ளது. இதற்காக, மீண்டும் பாக்ஸரை விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் பழைய பாக்ஸர் நம்பிக்கை பெற்ற மாடலும்கூட.

அதிக மைலேஜ், குறைந்த விலையில் வரும் என்பதால் பாக்ஸர் மீண்டும் ஒரு ரவுண்டு வரும் என்று பஜாஜ் நம்புகிறது. தற்போது பழைய பாக்ஸரின் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு பஜாஜ் ஆட்டோ பாக்ஸர் பெயரில் 150சிசி பைக் மாடலை அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்த பைக் பல்வேறு காரணங்களால் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த நிலையில், 100சிசி பாக்ஸரை பஜாஜ் ஆட்டோ விரைவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 5, 2012, 9:52 [IST]
English summary
Bajaj auto is planning to relaunch 100cc Boxer in Indian market soon, reports says. The boxer will give tough competition to Hero Spelendor, Honda Dream yuga bikes.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+