ரூ.94,000 ஆன் ரோடு விலையில் புதிய பல்சர் விற்பனை!
இளசுகள் மத்தியில் பேராவலை ஏற்படுத்திய புதிய பல்சர் ரூ.94,300 ஆன்ரோடு விலையில் டெல்லியில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
எந்தவொரு அறிவிப்பும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் புதிய பல்சரை புனேயில் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது பஜாஜ்.

இதைத்தொடர்ந்து, தற்போது டெல்லியில் புதிய பல்சர் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.94,300 ஆன்ரோடு விலையில் புதிய பல்சர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களில் புதிய பல்சர் விரைவில் முறைப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஆன்ரோடு விலை அப்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியை விட ரூ.2,000 முதல் ரூ.3,000 கூடுதலான ஆன்ரோடு விலையில் சென்னையில் விற்பனைக்கு வரலாம் என்று தெரிகிறது.
ட்ரிப்பிள் ஸ்பார்க் ப்ளக் தொழில்நுட்பம் கொண்ட இந்த புதிய பல்சரில் 199.5 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 23.17 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.
மணிக்கு அதிகபட்சம் 136 கிமீ வேகத்தில் புதிய பல்சர் பறக்கும். ஹீரோ கரீஷ்மா மற்றும் ட்யூக் 200 ஆகிய பைக்குகளைவிட மிகக் குறைந்த விலையில் புதிய பல்சரை பஜாஜ் விற்பனைக்கு விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








