புதிய பல்சரை வடிவமைத்த பஜாஜ் டிசைனர் பிஎம்டபிள்யூவுக்கு தாவினார்

கடந்த மாதம் புத்தம் புதிய பல்சர் மாடலை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்தது. பல்சர் 200 என்எஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய பல்சர் மாடலை பஜாஜ் ஆட்டோவின் வடிவமைப்பு மையத்தின் துணைத் தலைவராக இருந்த எட்கர் ஹெய்ன்ரிச் தலைமையிலான குழுவினர்தான் வடிவமைத்தனர்.
இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோவிலிருந்து எட்கர் சமீபத்தில் ராஜினாமா செய்தார். தற்போது அவர் பிஎம்டபிள்யூ மோட்டோராட் பைக் தயாரிப்பு நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜூலை 1ந் தேதி அவர் பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் பொறுப்பேற்க உள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு எட்கர் பஜாஜ் ஆட்டோவின் வடிவமைப்பு பிரிவின் துணைத் தலைவராக பதவியேற்றார். பஜாஜ் ஆட்டோவில் பணியில் சேர்வதற்கு முன் அவர் பிஎம்டபிள்யூ நிறுவனத்தில்தான் வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








