அடுத்த வாரம் அறிமுகமாகிறது பஜாஜின் புதிய பல்சர்

முதலில் மஹாராஷ்டிராவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய பல்சர் 200 என்எஸ், தொடர்ந்து பிற மாநிலங்களிலும் விற்பனைக்கு வருகிறது.
கடந்த மாதமே விற்பனைக்கு வந்துவிடும் என்று எதி்ர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய பல்சரை இதுவரை விற்பனைக்கு விடாமல் பஜாஜ் தாமதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், அடுத்த வாரம் புதிய பல்சரை விற்பனைக்கு வர இருப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இதனை பஜாஜ் ஆட்டோ சிஇஓ ராஜீவ் பஜாஜ் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதிபடுத்தியுள்ளார்.
தற்போதைய பல்சர் வரிசை பைக்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட 'திறந்த மேனி' வடிவமைப்புடன் வரும் புதிய பல்சர் 200 சிசி எஞ்சினுடன் வருகிறது.
பல்சர் பைக்குகள் ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கை பெற்ற பைக்குகளாக இருப்பதால் புதிய பல்சர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்காக, ஏராளமான வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








