375சிசி பல்சர் வடிவமைப்பில் பஜாஜ் தீவிரம்: அடுத்த ஆண்டு வருகிறது?

Bajaj Pulsar
375 சிசி திறன் கொண்ட புதிய பல்சரை பஜாஜ் வடிவமைத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அடுத்த ஆண்டு புதிய பல்சர் மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என அந்த தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டு சாலைகளில் பல்சர் வரிசை பைக்குகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனை தக்கவைத்து பிற நிறுவனங்களுக்கு இடம் கொடுக்காத வகையில் பல்சர் வரிசையில் புதிய பைக்குகளை பஜாஜ் ஆட்டோ தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

கடைசியாக பல்சர் 200 என்எஸ் என்ற திறந்த மேனி வடிவமைப்பு கொண்ட புதிய பைக்கை பஜாஜ் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. புதிய பல்சரும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், பல்சர் வரிசையில் அடுத்து 375 சிசி திறன் கொண்ட புதிய பைக்கை பஜாஜ் வடிவமைத்து வருகிறது. இந்த புதிய பைக்கை அடுத்த ஆண்டுக்குள் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

டுவின் ஸ்பார்க் தொழில்நுட்பத்துக்கு அடுத்து டிரிப்பிள் ஸ்பார்க் தொழில்நுட்பத்துடன் பல்சர் 200 என்எஸ் பைக்கை பஜாஜ் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், சிங்கிள் சிலிண்டருடன் தயாராகி வரும் புதிய பைக்கின் எஞ்சினும் புதுமையான தொழில்நுட்பத்துடன் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, October 5, 2012, 10:09 [IST]
English summary
While Bajaj is headlining with their Pulsar 200NS, we have received reports that the company is working behind close doors on a single cylinder 375cc Bajaj Pulsar.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+