புதிய பல்சருக்கு டீலர்களில் ரகசிய புக்கிங் நடப்பதாக தகவல்

கடந்த மாதம் பல்சர் குடும்பத்தில் புதிய வாரிசை பஜாஜ் ஆட்டோ சேர்த்துள்ளது. பல்சர் 200 என்எஸ் என்ற பெயரில் வடிவமைப்பில் முற்றிலும் மாறுபட்ட புதிய பல்சரை பஜாஜ் அறிமுகம் செய்தது.
நேக்டு ஐ என்று கூறப்படும் திறந்த மேனி வடிவமைப்புடன் முழுக்க முழுக்க ஒரு ஸ்டைலிஷான ஸ்போர்ட்ஸ் பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பல்சரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது பஜாஜ்.
ஆனால், புதிய பல்சர் எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்து அறிவிப்பையும் பஜாஜ் ஆட்டோ இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில், புதிய பல்சருக்கு பஜாஜ் ஆட்டோ டீலர்களில் ரகசியமாக புக்கிங் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
முன்பணம் பெற்றுக்கொண்டு ரகசியமாக முன்பதிவு செய்யப்படுவதாக டீலர் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. 200 சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் வரும் புதிய பல்சர் ரூ.1 லட்சம் விலைக்குள் வி்ற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








