கேடிஎம் டியூக் பைக் முன்பதிவு தொகை 20,000 ரூபாயாக குறைப்பு

ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனத்தின் டியூக் 200 பைக்கை கடந்த மாதம் பஜாஜ் ஆட்டோ ரூ.1.17 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.
வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் அதிக ஆற்றலால் கேடிஎம் டியூக் பைக் வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பியது. மேலும், கேடிஎம் டியூக் 200 பைக்குக்கு ரூ.30,000 முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று பஜாஜ் அறிவித்தது.
இந்த நிலையில், கேடிஎம் டியூக் 200 பைக் அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களில் புதிய 200 சிசி பல்சரையும் பஜாஜ் பார்வைக்கு அறிமுகப்படுத்தியது. இது கேடிஎம் டியூக் பைக்கின் மார்க்கெட்டில் சிறு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
கேடிஎம் டியூக் பைக்கை புக்கிங் செய்த பல வாடிக்கையாளர்கள் புதிய 200 சிசி பல்சரை பார்த்தவுடன் மனது மயங்கி தங்களது புக்கிங்கை கேன்சல் செய்ய துவங்கியுள்ளனர். இதனால், பஜாஜ் ஆட்டோ புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக முன்பதிவு தொகையை ரூ.30,000 லிருந்து ரூ.20,000மாக பஜாஜ் ஆட்டோ தற்போது அதிரடியாக குறைத்துள்ளது.
மேலும், புக்கிங்கை ரத்து செய்தால் ரூ.3,000 பிடித்தம் செய்யப்பட்டு மீதித்தொகை வழங்கப்படும் என்றும் பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








