புதிய பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட டிஸ்கவர்: பஜாஜ் அறிமுகம்
புதிய பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய 125 சிசி டிஸ்கவர் பைக்கை பஜாஜ் ஆட்டோ சற்றுமுன் அறிமுகப்படுத்தியது. ஸ்போர்ட் டூரர் பைக்காக வந்துள்ள புதிய டிஸ்கவர் நிச்சயம் வாடிக்கையாளர்களை அசத்தும் என்று தெரிகிறது.
பஜாஜ் ஆட்டோவின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றாக டிஸ்கவர் வரிசை பைக்குகள் திகழ்கின்றன. தற்போது 100 சிசி, 135 சிசி மற்றும் 150 சிசி எஞ்சின் கொண்ட மாடல்களில் டிஸ்கவர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தால் பஜாஜ் ஆட்டோ நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. எனவே, புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் அந்த நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில், 125 சிசி எஞ்சின் கொண்ட டிஸ்கவர் எஸ்டி என்ற பெயரில் புதிய பைக் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது பஜாஜ் ஆட்டோ. புதிய பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய டிஸ்கவர் வடிவமைப்பில் அசத்தலாக இருக்கிறது.
பெட்ரோல் டேங்க், ஹெட்லைட், இருக்கை கீழே இருக்கும் புதிய ஸ்கூப் என எங்கெங்கு காணினும் புதுமை பரவி கிடக்கிறது. இதன் காஸ்ட் வீல் புதிய வடிவமைப்பை கொண்டுள்ளது. பின்புறம் மோனோ சஸ்பென்ஷன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஸ்போர்ட் டூரர் ரக பைக்காக வந்துள்ள புதிய டிஸ்கவரின் 125 சிசி எஞ்சின் 13 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். அடுத்த மாதம் இந்த புதிய டிஸ்கவர் நாடு முழுவதும் உள்ள பஜாஜ் ஷோரூம்களில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








