ரூ.5 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த செக்வே ஸ்கூட்டர்
தசாவதாரம் படத்தில் கமல் பயன்படுத்திய புதுமையான செக்வே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த செக்வே நிறுவனம் புதுமையான வடிவமைப்பு கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது. நின்றபடி ஓட்டிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் தசாவதாரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் பயன்படுத்தியிருப்பார்.

இந்த செக்வே ஸ்கூட்டர்கள் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. சுற்றுலாத் துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பேர்டு நிறுவனம் செக்வே ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதுமையான ஸ்கூட்டர்கள் ரூ.5 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எடைக்கு தகுந்தவாறு தாமகவே பேலன்ஸ் செய்து கொள்ளும் வகையில் செக்வே ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டர் லித்தியம் அயான் பேட்டரி உதவியோடு இயங்குகிறது. இதனால், சுற்றுச் சூழலுக்கு உகந்த வாகனமாக இதை கூறலாம்.பேட்டரியின் திறனை பொறுத்து இரண்டு மாடல்களில் இந்த செக்வே ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கிறது.
இதில், ஐ2 பிடி என்ற மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் 38 கிமீ வரை செல்லலாம். மற்றொரு மாடலான எக்ஸ்2வில் 19கிமீ செல்ல முடியும்.
50 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டர்கள் அனைவரும் எளிதில் கையாளும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பண்ணை வீடுகள் போன்றவற்றில் இந்த செக்வே ஸ்கூட்டர் மிகுந்த பயன்பாடு கொண்டதாக இருக்கும்.
மேலும், இது தனிநபர் பயன்பாட்டுக்கும் சிறந்த ஸ்கூட்டர் என்று கூறுகிறது பேர்டு. எனவே, போக்குவரத்தில் புதிய புரட்சியை செக்வே ஸ்கூட்டர் படைக்கும்.
டெல்லியில் செக்வே ஸ்கூட்டர்களின் ரோடு ஷோக்களை நடத்த பேர்டு குழுமம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், செக்வே ஸ்கூட்டர்களை எளிதாக பிரபலமடையச் செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








