ரூ.9.99 லட்சத்தில் எப்650 பைக்கை அறிமுகப்படுத்தியது பிஎம்டபிள்யூ

இந்த பைக் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுவதால் 75 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்பதால்தான் விலை அதிகமாக இருக்க காரணம். இந்த பைக்கில் 71 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 800 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
இதில், 6 ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. முன்பக்கம் 17 இஞ்ச் அலாய் வீலும், பின்பக்கம் 19 இஞ்ச் அலாய் வீலும் உள்ளதால் கூடுதல் கவர்ச்சியாக இருக்கிறது. மேலும், இந்த பைக்கின் எடைதான் மலைக்க வைக்கிறது. இந்த பைக்கின் எடை 200 கிலோ.
இந்த பைக்கில் ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம்(ஏபிஎஸ்) பொருத்தப்பட்டிருப்பதால் கூடுதல் பாதுகாப்பை வழங்கும். டெல்லி மற்றும் மும்பையிலுள்ள நவனீத் மோட்டார்ஸ் ஷோரூம்களில் இந்த புதிய பைக்கை புக்கிங் செய்து வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








