மணிக்கு 329 கிமீ வேகத்தில் பறந்து சாதனை படைத்த பிஎம்டபிள்யூ பைக்

அமெரிக்காவிலுள்ள போனிவில்லி சால்ட் ப்ளாட்ஸ் பகுதியில் வாகனங்களுக்கான தரைவழி அதிவேக சோதனைகள் நடத்தப்படுவது வழக்கம் அந்த வகையில், பிரபல பைக் பந்தய வீரரான ஆன்டி சில்ஸ் சமீபத்தில் பிஎம்டபிள்யூ எஸ் 1000ஆர்ஆர் பைக்கில் சோதனை ஒன்றை மேற்கொண்டார். 17 ஆண்டுகள் பைக் பந்தயத்தில் அனுபவம் வாய்ந்த ஆன்டி சில்ஸ் பிஎம்டபிள்யூ எஸ் 1000ஆர்ஆர் பைக்கில் காற்றோடு காற்றாக பறந்தார்.
இரு வழிப்பாதையில் அவர் மணிக்கு சராசரியாக சென்ற வேகத்தின் அடிப்படையில் அதிகபட்சம் மணிக்கு 329 கிமீ வேகத்தை எட்டிப் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார். 1000சிசி திறன் கொண்ட பைக் பிரிவில் இந்த புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பெருமையளிப்பதாக ஆன்டி சில்ஸ் தெரிவித்தார். கடந்த 2009ம் ஆண்டும் இதுபோன்ற அதிவேக சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








