புதிய சிபிஆர் 150 ஆர் பைக்குக்கு புக்கிங் துவங்கிய ஹோண்டா

Honda CBR 150 R
ரூ.1.16 லட்சம் விலையில் புதிய சிபிஆர் 150 ஆர் பைக்கை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரும் புதிய சிபிஆர் 150க்கு ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் நேற்றே புக்கிங்கை துவங்கிவிட்டது.

ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே சிபிஆர் பிராண்டில் 250 சிசி மாடலை விற்பனை செய்து வருகிறது. அந்த செக்மென்ட்டில் ஹோண்டா சிபிஆர் 250 விற்பனையில் முன்னிலை வகிக்கிறது.

சிபிஆர் பிராண்டுக்கு கிடைத்த அமோக ஆதரவை தொடர்ந்து தற்போது அதே பிராண்டில் புதிய 150 சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிளை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வருகிறது.

ஹோண்டா சிபிஆர் 250 சிசியை விட குறைந்த விலையில் வரும் பைக் என்பதால் இளசுகள் மத்தியில் இந்த பைக் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ரூ.1.16 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பைக்குக்கு நேற்றே புக்கிங் துவங்கிவிட்டது ஹோண்டா நிறுவனம்.

49 சிசி சிங்கிள் சிலிண்டர் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பைக் 18 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் கொண்ட இந்த புதிய மோட்டார்சைக்கிள் 4 கலர்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல் கட்டமாக 750 பைக்குகள் மட்டுமே விற்பனைக்கு கொடுக்கப்பட உள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 16, 2012, 10:08 [IST]
English summary
As we reported erlier Japanese two-wheeler major Honda Motorcycles and Scooters India Ltd (HMSI) has now opend bookings for its recently unveiled all new sports bike Honda CBR 150R. Deliveries of this bike will start by end of this month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+