சுஸுகி ஹயாட்டே வாங்கினால் சல்மான்கானை நேரில் சந்திக்கும் வாய்ப்பு
ஹயாட்டே பைக் வாங்கும் வாடிக்கையாளர்கள் பாலிவுட் நடிகர் சல்மான்கானை நேரில் சந்திக்கும் அரிய வாய்ப்பை பெறலாம் என்று சுஸுகி அறிவித்துள்ளது.
கடந்த மேமாதம் ஹயாட்டே என்ற 110சிசி பைக்கை சுஸுகி விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த பைக்கை பிரபலப்படுத்தும் முயற்சிகளை சுஸுகி தீவிரப்படுத்தியிருக்கிறது.

ஹயாட்டே பைக்கின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்ட நடிகர் சல்மான்கானை வைத்து ஹயாட்டே விற்பனையை அதிகரிக்க சுஸுகி புதிய விளம்பர பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. ஹயாட்டே பைக்கை வாங்கும் 6 அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சல்மான்கானை நேரில் சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற இருக்கும் விழாவில் அந்த 6 அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்ட்டு புதிய ஹயாட்டே பைக்கை பரிசாக கொடுக்கப்படும் என்றும் சுஸுகி தெரிவித்துள்ளது. வரும் 31ந் தேதி வரை ஹயாட்டே வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த அரிய வாய்ப்பு வழங்கும் சலுகை பொருந்தும் என சுஸுகி தெரிவித்துள்ளது.
சல்மான்கான் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் ஏக்தா டைகர் படத்தின் மூலமும் ஹயாட்டேவை பிரபலப்படுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.,"ஏக்தா டைகர் ஏக் ஹை ஹயாட்டே" என்ற இந்த பிரச்சாரத்தை தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் மற்றும் ஆன்லைன் மீடியா வழியாக விளம்பரம் செய்ய சுஸுகி முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








