ஸ்கூட்டர் வாங்கினால் ரூ.2,000க்கு பெட்ரோல் ப்ரீ: மஹிந்திரா ஆஃபர்

பண்டிகை காலத்தை முன்னிட்டு அனைத்து வாகன நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், மஹிந்திராவின் இருசக்கர பிரிவும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.
ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிபந்தனைகளுடன் ரூ.2,000 மதிப்புக்கு பெட்ரோலை இலவசமாக பெறும் சலுகையை அறிவித்துள்ளது. வரும் 31ந் தேதி வரை இந்த சலுகையை நாடு முழுவதும் உள்ள 411 மஹிந்திரா இருசக்கர வாகன ஷோரூம்களில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா சந்தைப்படுத்துதல் பிரிவு துணைத்தலைவர் விரேன் போப்லி கூறுகையில்," பண்டிகை கால எப்போதுமே உற்சாகம் நிறைந்தது. எனவே, வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் வகையில் இந்த பெட்ரோல் சலுகையை வழங்குகிறோம். டியூரோ டிஇசட் மற்றும் ரோடியோ டிஇச்ட ஆகிய இரண்டு பவர்ஃபுல் ஸ்கூட்டர்களுக்கும் சலுகைகைகளை பெறலாம்," என்றார்.


Click it and Unblock the Notifications








