சந்தோஷின் ஆகாய சாகசங்கள்: டிரைவ்ஸ்பார்க் பிரத்யேக கவரேஜ்
நம் நாட்டில் கார், பைக் பந்தயங்கள் தற்போதுதான் பிரபலமாகி வருகின்றன. பார்முலா ஒன் பந்தயத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டு சர்வதேச மோட்டார்பைக் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த நிலையில், ஆஃப்ரோடு மட்டுமின்றி ஆகாயத்திலும் பறந்து சாகசங்கள் புரியும் "எக்ஸ்ட்ரீம் பைக் ரேஸ்" பந்தயங்கள் நம் நாட்டில் இன்னும் பிரபலமாகவில்லை.
ஆபத்துக்கள் அதிகம் என்பதால் பெற்றோர் இதுபோன்ற பந்தயங்களை ஊக்குவிப்பதில்லை என்பதோடு, ஸ்பான்சரும் கிடைப்பதில்லை. அபாயங்கள் நிறைந்த இந்த பைக் ரேஸில் கலந்து கொள்ள வீரர்களுக்கு மனதளவில் திடமும், உடல் வலுவும் வேண்டும்.
சூப்பர்கிராஸ் மற்றும் மோட்டோகிராஸ் பந்தயங்களில் தென் இந்தியாவை சேர்ந்த சிஎஸ்.சந்தோஷ் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சத்தமில்லாமல் பல சாதனைகளை படைத்து வருகிறார். வளரும் நட்சத்திரமான சிஎஸ் சந்தோஷுக்கு தமிழகத்தை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பாளரான டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் அளித்து வருகிறது.
ஓசூரிலுள்ள டிவிஎஸ் பந்தய டிராக்கில் சமீபத்தில் தனது சாகசங்களை சிஎஸ் சந்தோஷ் நடத்தி காட்டினார். இந்த ஆகாய சாகசங்களை வாசகர்களுக்காக டிரைவ்ஸ்பார்க் பிரத்யேகமாக வழங்குகிறது. சிஎஸ் சந்தோஷின் மயிர்க்கூச்செரிய செய்யும் சாகசங்களை ஸ்லைடரில் காணலாம்.
இந்த நிகழ்ச்சியின் பிரத்யேக வீடியோ காட்சிகளை டிவிஎஸ் ரேஸிங், ஸ்க்ரூ லூசிங் பிக்சர்ஸ், ப்ரோ சைக்கிள் இந்தியா மற்றும் ப்ளைகேம் ஸ்டூடியோ, டிரைவ்ஸ்பார்க் தளம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன. வாசகர்களுக்கு விரைவில் இந்த வீடியோ காட்சிகள் வழங்கப்பட உள்ளது. கீழே உள்ள லிங்கை சொடுக்கி அதன் டிரைலரை பார்த்து பரவசமடையுங்கள்.

அந்தரத்தில் பறக்கும் சந்தோஷ்
டிவிஎஸ் ஆர்டிஆர் 250 பைக்கில் அந்தரத்தில் பறக்கும் சிஎஸ் சந்தோஷ்

டிவிஎஸ் ரேஸிங் அணியின் முதன்மை வீரர்
டிவிஎஸ் ரேஸிங் அணியின் முதன்மை வீரராக சந்தோஷ் இருந்து வருகிறார். 2005, 2006. 2008 மற்றும் 2010ம் ஆண்டுகளில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

எதிர்கால லட்சியம்
18 வயதில் பைக் ரேஸ் பயிற்சியை துவங்கி பல தடைகற்களை தாண்டி சாதனை புரிந்து வரும் 28 வயதாகும் சந்தோஷ் இன்னும் ஏராளமான சாதனைகளை புரிய வேண்டும் என்ற கனவுகளுடன் இருக்கிறார்.

விண்ணுக்கும், மண்ணுக்கும்
விண்ணுக்கும், மண்ணுக்கும் பறந்தபோது கிளிக்கிய பிரத்யேக ஷாட்

தோல்விகளை கண்டு துவளா மனம்
ஏற்றத்தையும், இறக்கத்தையும் அடிக்கடி சந்தித்தாலும் துவளா மனதோடு பல வெற்றிகளை பெற்றுள்ளார். குறிப்பாக, இலங்கை மற்றும் ஆசிய பைக் ரேஸ்களில் அதிக வெற்றிகளை குவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








