உள்நாட்டிலேயே ஹயோசங் ஜிடி250ஆர் பைக் தயாரிப்பு: டிஎஸ்கே தீவிரம்

இந்த புதிய ஆலையை ரூ.300 கோடி முதலீட்டில் கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளது டிஎஸ்கே நிறுவனம். புதிய ஆலைக்கான இடம் குறித்து விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குல்கர்னி கூறுகையில்," அடுத்த 18 மாதங்களில் புதிய ஆலை செயல்பாட்டுக்கு வரும். மேலும், ஹயோசங் ஜிடி250ஆர் பைக்குக்கான பெரும்பான்மையான உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே பெற முடிவு செய்துள்ளோம்.
இதன்மூலம், இந்த பைக்கின் விலை கணிசமாக குறையும் என்பதால் போட்டியாளர்களை எளிதாக சமாளிக்க முடியும். வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த விலையில் பைக்குகளை விற்பனை செய்ய வழி பிறக்கும்," என்றார்.
புதிய ஆலை செயல்பாட்டு வந்தால், தற்போது ரூ.2.75 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள ஜிடி250ஆர் பைக் ரூ.1.5 லட்சமாக விலை குறையும் என்று தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








