புதுமையான வண்ணத்தில் அவதாரம் எடுக்கும் டுகாட்டி மான்ஸ்ட்டர்

ஆடைகள், காலனிகள், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை தயாரிப்பதில் டீசல் நிறுவனம் உலக அளவில் பிரபலமாக திகழ்கிறது. மோட்டோ ஜிபி பந்தயத்திற்கான ஸ்பான்சருக்காக டீசலுடன் கடந்த ஆண்டு டுகாட்டி கூட்டணி அமைத்தது.
இந்த நிலையில், டீசலுடன் கூட்டணி அமைத்து ஓராண்டு நிறைவு பெறுவதை கொண்டாடும் விதமாக புதிய ஸ்பெஷல் எடிசன் மான்ஸ்ட்டர் பைக்கை டுகாட்டி அறிமுகம் செய்துள்ளது. ராணுவ வீரர்களின் சீருடை கலரில் வரும் இந்த புதிய பைக் வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு வருகிறது.
உலக அளவில் டுகாட்டியின் பிரபல மோட்டோர்சைக்கிள் மாடலான மான்ஸ்ட்டர், அரிய வண்ணத்தில் வருவதால் வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பைக் பார்ப்போரின் மனதை சட்டென்று தன் வசப்படுத்திவிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


Click it and Unblock the Notifications








