மான்ஸ்டர் 795 பைக்கின் விலையை உடனடியாக உயர்த்தும் திட்டம் இல்லை: டுகாட்டி

Ducati Monster
மான்ஸ்டர் 795 சூப்பர் பைக் தொடர்ந்து ரூ.1 லட்சம் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக, வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான செய்தியை அறிவித்துள்ளது டுகாட்டி.

டுகாட்டி மான்ஸ்டர் 795 சூப்பர் பைக்குக்கு சர்வதேச அளவில் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த நிலையில், கடந்த மாதம் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் புதிய டுகாட்டி மான்ஸ்டர் 795 சூப்பர் பைக்கை டுகாட்டி அறிமுகம் செய்தது.

முதலில் ரூ.6.99 லட்சம் விலையில் மான்ஸ்டர் 795 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மறுநாளே டுகாட்டி நிறுவனம் மான்ஸ்டரின் விலையை ரூ.1 லட்சம் அதிரடியாக குறைத்தது.

இதனால், வாடிக்கையாளர்களின் கவனத்தை டுகாட்டி மான்ஸ்டர் 795 பைக் வெகுவாக ஈர்த்தது. மேலும், அறிமுக சலுகையாக ரூ.1 லட்சம் தள்ளுபடி வழங்கியுள்ளதாக கருதப்பட்டதால், விரைவில் மான்ஸ்டர் 795 விலையை டுகாட்டி உயர்த்தலாம் என்று கருதப்பட்டது.

ஆனால், தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டுகாட்டி, மான்ஸ்டரின் விலையை உடனடியாக உயர்த்தும் திட்டமில்லை என்று கூறி பைக் பிரியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

மேலும், இந்தியாவில் 300 பைக்குகள் தற்போதைய ரூ.5.99 லட்சம் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படும் என்று டுகாட்டி தெரிவித்துள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 795 பைக்குகள் தாய்லாந்து நாட்டிலுள்ள டுகாட்டி ஆலையிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யபப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 9, 2012, 16:39 [IST]
English summary
It is a well known fact that Ducati motorcycles cost a bomb. Everyone were surprised when the Italian bike maker launched the Monster 795 with a price tag of Rs.5.99 lakhs only. But Ducati has now stated the Rs.5.99 price tag for the Monster 795 will not remain for ever. In fact just the first 300 Monster 795 will be priced at that level. Ducati will increase the price of the monster 795 to Rs.6.99 lakhs according to reports. This price hike will become effective only after it sells the first batch of 300 motorcycles. Hence we can be rest assured that the price hike of the Monster will not happen in the very near future.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+