புதிய டிரெக் சூப்பர் சைக்கிள்: விலை ஜஸ்ட் ரூ2.35 லட்சம்தான்!
டாடா நானோ, மாருதி 800 காருக்கு இணையான விலையில் உயர்தர சூப்பர் சைக்கிளை ஃபயர்ஃபாக்ஸ் பைக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

உயர்தர சைக்கிள்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் ஃபயர்ஃபாக்ஸ் முன்னிலை வகிக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் ஏராளமான மாடல்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், சாகச விரும்பிகள் மற்றும் நீண்ட தூர செல்ல விரும்புவர்களுக்கான புதிய உயர்தர சூப்பர் சைக்கிளை ஃபயர்ஃபாக்ஸ் அறிமுகம் செய்திருக்கிறது. ரூ.2.35 லட்சத்தில் சூப்பர் ஃப்ளை கோம்ப் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய சூப்பர் சைக்கிள் பிரிமியம் சைக்கிள் விரும்பிகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும். இதுதவிர, சூப்பர் ப்ளை ஏஎல் என்ற பிரிமியம் சைக்கிளையும் இந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த பிரிமியம் சைக்கிள் ரூ.1.45 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவ் இந்தர் சிங் கூறுகையில்,"சிறந்த கட்டுமானம், உயர் தொழில்நுட்பம் கொண்ட இந்த புதிய சூப்பர் சைக்கிள்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் இதுபோன்ற சிறந்த தயாரிப்புகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. ஆண்டுக்கு 3,000 சூப்பர் சைக்கிள்களை விற்பனை செய்ய இலக்கு வைத்திருக்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








