2014ம் ஆண்டில் சொந்த தொழில்நுட்பத்தில் முதல் பைக் அறிமுகம்: ஹீரோ

Hero Bike
வரும் 2014ம் ஆண்டு ஹோண்டா தொழில்நுட்பம் இல்லாத முதல் பைக்கை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஹீரோ ஹோண்டா கூட்டணியிலிருந்து ஹோண்டா விலகியது. இதையடுத்து, ஹீரோ நிறுவனம் தனியாக வர்த்தக பயணத்தை துவங்கியது. இருப்பினும், வரும் 2014ம் ஆண்டு வரை ஹோண்டா தொழில்நுட்பத்தை தனது பைக்குகளில் ஹீரோ மோட்டோகார்ப் பயன்படுத்திக் கொள்ள உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் புதிய தொழில்நுட்ப பார்ட்னர்களை இணைத்துக் கொண்டுள்ளது. மேலும், ஹோண்டா தொழில்நுட்பம் இல்லாமல் தனது சொந்த தொழில்நுட்பத்தில் பைக்குகளை தயாரிக்கவும் முனைப்பு காட்டி வருகிறது.

உலக அளவில் பைக் தயாரிப்பில் பெரிய நிறுவனமாக திகழும் ஹீரோ மோட்டோகார்ப் ஹோண்டா தொழில்நுட்பம் இல்லாமல் மார்க்கெட்டில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளுமா என்பது குறித்து ஆட்டோமொபைல் துறையினர் ஒருபுறம் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, வரும் 2014ம் ஆண்டில் ஹோண்டா தொழில்நுட்பம் இல்லாமல் புத்தம் புதிய பைக்கை அறிமுகப்படுத்த இருப்பதாக கூறியுள்ளது. புதிய பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் இந்த புதிய பைக் நிச்சயம் தனது மார்க்கெட்டை பலப்படுத்தும் என்று ஹீரோ நம்பிக்கையுடன் கூறியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 7, 2012, 13:31 [IST]
English summary
World largest two wheeler maker Hero MotoCorp today said its first bike without the technology of erstwhile partner Honda will hit the market by 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+