ஹயோசங்- கார்வேர் கூட்டணி பிரிந்தது

Hyosung
ஹயோசங் பிராண்டின் சூப்பர் பைக்குகளின் அசெம்பிளிங் மற்றும் விற்பனை செய்யும் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டுள்ளது கார்வேர் நிறுவனம்.

புனேவை சேர்ந்த கார்வேர் நிறுவனம் தென்கொரியாவை சேர்ந்த எஸ்டி மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹயோசங் பிராண்டில் சூப்பர் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் தொழிற்சாலை அமைத்து கார்வேர் நிறுவனம் ஹயோசங் பிராண்டு சூப்பர் பைக்குகளை அசெம்பிளிங் செய்து வந்தது. மேலும், நாடு முழுவதும் டீலர்களையும் அமைத்து பைக் விற்பனையையும் கவனித்து வந்தது.

இந்த நிலையில், எஸ்டி மோட்டார்ஸ் நிறுவனத்துடனான கூட்டணியிலிருந்து கார்வேர் விலகிக் கொண்டுள்ளது. இதையடுத்து, ரியல் எஸ்டேட் துறையில் புகழ்பெற்ற டிஎஸ்கே நிறுவனம் கார்வேர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளது.

டிஎஸ்கே நிறுவனம் ரியல் எஸ்டேட் மட்டுமின்றி, டொயோட்டோ கார் டீலராகவும் செயல்பட்டு வருகிறது. நாட்டின் மேற்கு பகுதியில் பல்வேறு ஷோரூம்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கார்வேர் நிறுவனத்திடமிருந்து ஹயோசங் பிராண்டு பொறுப்புகளை டிஎஸ்கே பெற்றுள்ளது. சூப்பர் பைககுகள் மட்டுமல்லாது எஸ்டி மோட்டார்ஸ் தயாரிக்கும் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் பைக் மற்றும் ஆஃப் ரோடு வாகனங்களையும் விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக டிஎஸ்கே தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவால் கார்களில் சன் கன்ட்ரோல் பிலிம் ஒட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் மிகப் பெரிய சன் கன்ட்ரோல் பிலிம் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்த கார்வேருக்கு திடீர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்தான், ஹயோசங் பிராண்டு வர்த்தகத்தை டிஎஸ்கேவிடம் கார்வேர் விற்பனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, June 7, 2012, 12:34 [IST]
English summary
South Korean motorcycle maker ST motors's hyosung brand has split with Indian sun film major Garware, with whom it had an alliance for the Indian motorcycle market.
மேலும்... #hyosung #ஹயோசங்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+