ரூ.21,000ல் வாகனங்களில் பொருத்தும் குட்டி வீடியோ கேமரா!
வாகனங்களில் பொருத்துவதற்கு விசேஷ வசதிகள் கொண்ட குட்டிக் வீடியோ கேமராக்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது கோ புரோ நிறுவனம்.
பைக் மற்றும் கார் பந்தய வீரர்கள் தங்களது வாகனத்தில் குட்டிக் வீடியோ கேமராக்களை பொருத்தி தங்களது சாகசங்கள் மற்றும் வேகத்தை பிரத்யே காட்சிகளாக படம் பிடிப்பது வழக்கம். பார்முலா ஒன் மற்றும் மோட்டோ ஜிபி பந்தயங்களை பார்க்கும்போது கூட வீரர்கள் செல்லும் வேகம் மற்றும் பிரத்யேகமான காட்சிகள் இந்த வீடியோ கேமரா மூலம் காட்டப்படும்.
(கோ புரோவில் எடுக்கப்பட்ட பிரேத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்)

பைக் சாகசம்

கடல் அலையில் சாகச விளையாட்டு

ஆகாய சாகசம்

கையடக்க வடிவம்

ஆப் ரோடு சாகசம்

ரேஸ் பைக்கின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் கோ புரோ
இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த கோ புரோ நிறுவனம் இந்த கேமராக்களை தயாரிப்பதில் உலக அளவில் பிரபலமாக திகழ்கிறது. இந்த நிறுவனம் தற்போது இந்திய மார்க்கெட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளது.
சென்னையை சேர்ந்த ஸ்டீரியோவிஷன் என்ற நிறுவனம் கோ புரோ கேமராக்களை விற்பனை செய்கிறது. அறிமுகச் சலுகையாக ரூ.21,000 விலை முதல் கேமராக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எச்டி எனப்படும் உயர் துல்லியம் கொண்ட தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதால் இந்த கேமராவில் பதியப்படும் படங்கள் மிக துல்லியமாக இருக்கும் என்பது இதன் விஷேசம்.


Click it and Unblock the Notifications








