2 புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்திய ஹார்லி டேவிட்சன்

இதில், 72 மோட்டார்சைக்கிள் க்ரோம் பூச்சு மற்றும் அதிக ஆற்றல் வாய்ந்த எஞ்சினுடன் வந்துள்ளது. ஹார்டு கேன்டி பிக் ரெட் கலரில் வந்துள்ள புதிய ஸ்போர்ட்ஸ்டெர் 72 மோட்டார்சைக்கிள் நிச்சயம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் என்று கூறலாம்.
இந்த பைக் 1200 சிசி ஏர்கூல்டு வி-ட்வின் எஞ்சினுடன் வந்துள்ளது. இந்த எஞ்சின் 3500 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில் 96 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.
இதேபோன்று, சாப்ட்டெயில் மோட்டார்சைக்கிளும் வடிவமைப்பில் அசத்துகிறது. சாப்ட்டெயில் மோட்டார்சைக்கிளின் பின்சக்கரம் சிறியதாக இருப்பது இதற்கு வித்தியாசமான தோற்றத்தை கொடுக்கிறது.
சாப்ட்டெயில் மோட்டார்சைக்கிளில் 1690 சிசி ட்வின் கேம் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 132 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.


Click it and Unblock the Notifications








