சென்னையில் ஆலை கட்ட ஹார்லி டேவிட்சன் திட்டம்?

பிரிமியம் ரக பைக் மார்க்கெட்டில் தற்போது ட்ரையம்ப், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்களும் களமிறங்கியுள்ளதால் ஹார்லி டேவிட்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, போட்டியை சமாளிக்க இந்தியாவிலேயே பைக்குகளை தயாரித்து குறைந்த விலையில் பைக்குகளை விற்பனை செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஹரியானாவில் தற்போது ஹார்லியின் பைக்குகளை அசெம்பிளிங் செய்யும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிலேயே பைக்குகளை முழுவதுமாக தயாரிக்கும் வகையில் புதிய ஆலையை கட்ட உத்தேசித்துள்ளது.
புதிய ஆலை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. மேலும், புதிய ஆலை கட்டுவதற்கான இடத் தேர்வு பட்டியலில் சென்னை முதலாவதாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications