வாடிக்கையாளர் உபச்சாரத்தில் அசத்தும் ஹார்லி டேவிட்சன்

எந்த ஷோரூமில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான உபச்சாரம் தரப்படுகிறது என்பதை பைடு பைப்பர் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. ஷோரூம்களில் பைக் மாடல்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தரப்படும் விளக்கங்கள், டெஸ்ட் டிரைவ் உள்ளிட்ட 16 விதமான விபரங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான உபச்சாரம் தருவதிலும், சேவை வழங்குவதிலும் ஹார்லி டேவிட்சன் ஷோரூம்கள்தான் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ, டுகாட்டி நிறுவனங்களின் ஷோரூம்கள் இதற்கு அடுத்தடுத்த இடத்தை பிடித்தன.
டிரையம்ப், விக்டரி நிறுவனங்களின் ஷோரூம்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. சுஸுகி, கவாஸாகி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு போதுமான தகவல் தருவதில் பிற நிறுவனங்களை ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








