எஞ்சின் தயாரிப்புக்காக ஐரோப்பிய நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஹீரோ

Hero Splendor
எஞ்சின் தயாரிப்புக்காக ஐரோப்பாவை சேர்ந்த ஏவிஎல் நிறுவனத்துடன் ஹீரோ மோட்டோ கார்ப் கைகோர்க்கிறது. இதையடுத்து, ஸ்பிளண்டர், ஹங்க் உள்ளிட்ட ஹீரோ பைக்குகளில் புதிய எஞ்சினுடன் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக இருந்த ஹீரோ ஹோண்டாவிலிருந்து ஜப்பானை சேர்ந்த ஹோண்டா கடந்த ஆண்டு கழன்று கொண்டது. இதையடுத்து, இருசக்கர வாகன மார்க்கெட்டில் ஹீரோ தனித்து களமிறங்கியுள்ளது.

இருப்பினும், வரும் 2014ம் ஆண்டு வரை ஹீரோவுக்கு ஹோண்டா தொழில்நுட்பங்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஹீரோ மோட்டா கார்ப் நிறுவனத்திடம் மார்க்கெட்டில் போட்டி போடும் அளவுக்கு சொந்த தொழில்நுட்பங்கள் இல்லாததால் அந்த நிறுவனம் புதிய பார்ட்னர்களை தேடி வருகிறது.

அண்மையில் சூப்பர் பைக் தயாரிப்புக்காக அமெரிக்காவை சேர்ந்த எரிக் புயெல் நிறுவனத்தை பார்ட்னராக இணைத்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து, புகாட்டியை வாங்கவும் ஹீரோ மோட்டோ கார்ப் முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில், உலக அளவில் எஞ்சின் தயாரிப்பில் புகழ்பெற்ற ஆஸ்திரியாவை சேர்ந்த ஏவிஎல் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கிறது ஹீரோ மோட்டா கார்ப். இதன் மூலம், தனது தயாரிப்புகளுக்கு புதிய எஞ்சினை பொருத்தி விற்னைக்கு கொண்டு வர ஹீரோ திட்டமிட்டுள்ளது.

இத் தகவலை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால் சமீபத்தில் தெரிவித்தார். ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் 100 சிசி முதல் 150 சிசி வரையிலான பைக் மாடல்களுக்கு ஏவிஎல் நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்பத்தை பெற்று எஞ்சின் தயாரிக்க ஹீரோ மோட்டோ கார்ப் திட்டமிட்டுள்ளது.

இதனால், ஹீரோ நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களான ஸ்பிளண்டர், பேஸன், ஹங்க், சிபிசி ஆகிய மோட்டார்சைக்கிள்கள் புதிய எஞ்சினுடன் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஹோண்டாவின் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்படும் எஞ்சின்கள்தான் ஸ்பிளண்டர் உள்ளிட்ட ஹீரோ பைக்குகளில் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதிக மைலேஜ் மற்றும் ஸ்மூத்தான அனுபவத்தை கொடுக்கும் இந்த எஞ்சின்கள்தான் ஹீரோ பைக்குகள் இத்தனை காலம் வெற்றிகரமான மாடல்களாக திகழ்வதற்கு முக்கிய காரணம்.

இந்த நிலையில், ஸ்பிளண்டர் உள்ளிட்ட பைக்குகளில் புதிய எஞ்சின்கள் பொருத்தினால் அது எந்தளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை. அதேவேளை, ஏவிஎல் நிறுவனம் எஞ்சின் தயாரிப்பில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனம். உலகின் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ஏவிஎல் நிறுவனம் எஞ்சின் தயாரித்து சப்ளை செய்து வருகிறது.

இந்த நிலையில், ஸ்பிளண்டர் உள்ளிட்ட பைக்குகளில் புதிய எஞ்சின் பொருத்தினால் அது எந்த அளவுக்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 12, 2012, 14:46 [IST]
English summary
Hero MotoCorp, India's leading two wheeler manufacturer has decided to completely sever its ties with long time partner Honda. Hero has to still rely on Honda to get engine technology despite having split as independent manufacturers last year. But reports say Hero is now looking to develop its own engines with the help of European engine manufacturer AVL.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+