சென்னையில் இக்னைட்டர் பைக்கை அறிமுகப்படுத்திய ஹீரோ

இருசக்கர வாகன உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் அந்த இடத்தை தக்கவைக்க தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக, புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
இம்பல்ஸ் 150சிசி ஆப்ஃரோடு பைக் மற்றும் மேஸ்ட்ரோ ஸ்கூட்டரை தொடர்ந்து இந்த புதிய பைக்கை ஹீரோ அறிமுகப்படுத்தியிருக்கிறது. சென்னையில் நடந்த அறிமுக விழாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் சீனிவாசலு கலந்து கொண்டு இக்னைட்டரை அறிமுகம் செய்தார்.
இந்த புதிய பைக்கில் 11 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. சிறிய ரக ஸ்போர்ட்ஸ் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த புதிய பைக் ஹோண்டா ஸ்டன்னரின் காப்பிகேட் மாடல்தான்.
ஹீரோ இக்னைட்டர் சென்னையில் இரு வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. பேஸ் மாடல் ரூ.56,996 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டாப் வேரியண்ட் ரூ.59,031 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
இதனிடையே, ஹோண்டாவின் தொழில்நுட்ப உதவி ஒப்பந்தம் இன்னும் இரு ஆண்டுகளில் முடிவடைகிறது. எனவே, சொந்த தொழில்நுட்பத்தில் புதிய பைக்குகளை உருவாக்கும் பணிகளை ஹீரோ தீவிரமாக்கியிருக்கிறது. இதற்காக, ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் புதிய ஆராய்ச்சி மையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஆராய்ச்சி மையம் 250 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








