டூ வீலர் உற்பத்தியை ஆண்டுக்கு 7 மில்லியனாக உயர்த்தும் ஹீரோ

Karizma ZMR
வரும் மார்ச் மாதத்திற்கு பின் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியை ஆண்டுக்கு 7 மில்லியனாக அதிகரிக்க இருப்பதாக ஹீரோ மோட்டோ கார்ப் தெரிவித்துள்ளது.

நாட்டின் இருசக்கர வாகன உற்பத்தியில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஹீரோவுடனான கூட்டணியை ஹோண்டா முறித்துக்கொண்டது.

இதனால், சந்தையில் ஹீரோ நிறுவனம் தனித்து களமிறங்கியுள்ளது. இருசக்கர வாகன உற்பத்தியில் பிற நிறுவனங்கள் எளிதில் எட்ட முடியாத இடத்தில் இருந்தாலும், ஹோண்டா விலகியதால் பெரும் தாக்கத்தை ஹீரோ உணர்ந்து கொண்டுள்ளது.

பிரிமியம் மற்றும் 125 சிசி செக்மெண்ட்டுகளில் ஹீரோவின் விற்பனை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால், முதலிட்டத்தை தக்கவைக்க பல முயற்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

தவிர, பல புதிய வெளிநாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் அடுத்தடுத்து இந்திய சந்தையில் களமிறங்கி வருவதாலும் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும், ஹோண்டா சென்றதால் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பத்துறை வெற்றிடத்தை நிரப்புவதற்கு புதிய டெக்னாலஜி பார்ட்னர்களை சர்வதேச அளவில் ஹீரோ வலை வீசி தேடி வருகிறது.

இந்த நெருக்கடிகள் ஒருபக்கம் இருந்தாலும், தனது உற்பத்தியை வெகுவாக அதிகரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது ஆண்டுக்கு 6.2 மில்லியன் என்ற உற்பத்தியை அடுத்த நிதியாண்டு முதல் தனது உற்பத்தியை ஆண்டுக்கு 7 மில்லியன் மோட்டார்சைக்கிள்களாக அதிகரிக்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 21, 2012, 15:21 [IST]
English summary
The country's largest two wheeler maker Hero moto corp to increase two wheeler production by 7 million units per year by end of the march this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+