முதல் கார்பன் ஃபைபர் பிரேமுடன் புதிய சைக்கிள்: ஹீரோ அறிமுகம்

உலகின் மிகப்பெரிய சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ நிறுவனம் தலைமுறைக்கு தக்கவாறு தனது தயாரிப்புகளையும் மாற்றி வருகிறது.
இந்த வகையில், நகரங்களில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள கார்பன் ஃபைபர் ஃபிரேம் கொண்ட சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
அர்பன் ட்ரையல் என்ற புதிய பிராண்டில் ரெட் டாட் என்ற பெயரில் முதல் கார்பன் ஃபைபர் சைக்கிளை ஹீரோ இன்று அறிமுகம் செய்துள்ளது.
விமானங்கள், சூப்பர் கார்களில் பயன்படுத்தப்படும் கார்பன் ஃபைபர் அதிக உறுதித்தன்மை வாய்ந்தது. துரு பிடிக்காது, தூசி படியாது என்பதுடன் மிகக்குறைந்த எடை கொண்டதாக இருக்கும்.
எனவே, கார்பன் ஃபைபர் சைக்கிளுக்கு மவுசு கூடி வருகிறது. ஹீரோவின் ரெட் டாட் சைக்கிள் வெறும் 12.9 கிலோ மட்டுமே எடை கொண்டது.
நீலம், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் ரெட் டாட் சைக்கிள் விற்பனைக்கு வந்துள்ளது. அலாய் வீல்களுடன் 160மிமீ டிஸ்க் பிரேக்குகளுடன் ரெட் டாட் சைக்கிள் வந்துள்ளது.
ரூ.43,000 விலையில் இந்த புதிய கார்பன் ஃபைபர் ஃபிரேம் சைக்கிளை ஹீரோ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், அர்பன் ட்ரையல் பிராண்டில் மொத்தம் 16 புதிய கார்பன் ஃபைபர் சைக்கிள் மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக ஹீரோ தெரிவித்துள்ளது.
புதிய கார்பன் சைக்கிள்கள் அதிகபட்சம் ரூ.3.5 லட்சம் வரையிலான விலையில் புதிய சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








