காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் சிபிஇசட் எக்ஸ்ட்ரீமை அறிமுகப்படுத்தும் ஹீரோ

ஸ்பிளன்டர், பேஷன் ஆகிய பைக்குகளில் ஏற்கனவே ஹோண்டாவின் பெயர் நீக்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிட்டன.
அடுத்ததாக, சிபிஇசட் எக்ஸ்ட்ரீம் மற்றும் ஹங்க் பைக்குகளில் ஹோண்டா பெயரை நீக்கி புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்த ஹீரோ மோட்டோகார்ப் முடிவு செய்துள்ளது.
மேலும், இரண்டு பைக்குகளும் முன்பைவிட அதிக கவர்ச்சிகரமாக இருக்கும் வகையில் காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் ஹீரோ வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் ஹோண்டா யூனிகார்ன் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 149.2 சிசி எஞ்சின்தான் பொருத்தப்பட்டு உள்ளன. எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது.
இந்த எஞ்சின் 14.4 பிஎஸ் பவரையும், 12.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கின்றன.
சிபிஸி எக்ஸ்ட்ரீம் ரூ.68,000 எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஹங்க் ரூ.62,000 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








