2014ல் சொந்த தொழில்நுட்பத்தில் முதல் பைக் அறிமுகம்: ஹீரோ

Hero ZMR
அடுத்த நிதி ஆண்டில்(2013-14) சொந்த தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்படும் முதல் பைக்கை அறிமுகப்படுத்த இருப்பதாக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோண்டா பிரிந்ததையடுத்து சொந்த தொழில்நுட்பத்தில் புதிய மாடல்களை களமிறக்கும் பணிகளை ஹீரோ முடுக்கி விட்டுள்ளது. இதற்காக, அமெரிக்காவின் எரிக் புயெல், ஐரோப்பாவை சேர்ந்த ஏவிஎல் மற்றும் எஞ்சின் எஞ்சினியரிங் ஆகிய 3 நிறுவனங்களுடன் ஹீரோ ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

தற்போது ஹோண்டாவிடமிருந்து தொழில்நுட்பத்தை பெற்று வரும் ஹீரோ விரைவில் சொந்த தொழில்நுட்பத்தில் பைக்குகளை களமிறக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைப் பிரிவு மூத்தத் துணைத் தலைவர் அனில் துவா கூறுகையில்,"புதிய கூட்டணி நிறுவனங்களுடன் பெரிய அளவில் தொழில்நுட்ப பரிமாற்றங்களை செய்து வருகிறோம்.

2013-14ம் ஆண்டில் எங்களது சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். எரிக் புயெல் நிறுவனத்துடன் இணைந்து பிரிமியம் பைக்குகளையும், ஏவிஎல் மற்றும் எஞ்சின் எஞ்சினியரிங் நிறுவனத்துடன் இணைந்து இதர ரகத்தில் பைக்குகளையும் வடிவமைத்து வருகிறோம்," என்றார்.

2014ம் ஆண்டு வரை மட்டுமே ஹோண்டாவிடமிருந்து தொழில்நுட்பத்தை ஹீரோ பெற முடியும். எனவே, அதற்குள் புதிய மாடல்களை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் ஹீரோ உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, October 19, 2012, 10:39 [IST]
English summary
India's largest two-wheeler maker Hero MotoCorp has announced to launch the first product with its own technology by 2013-14 as it presses ahead the solo journey since parting ways with Japan's Honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+