ரூ.55,900 விலையில் ஹீரோவின் புதிய 125சிசி பைக் அறிமுகம்!

இக்னைட்டர் என்ற பெயரில் புதிய 125 சிசி பைக்கை ஹீரோ மோட்டோ கார்ப் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இது அச்சு அசல் ஹோண்டா ஸ்டன்னர் போன்று இருக்கிறது.

கடந்த ஆண்டு ஹோண்டா பிரிந்து சென்ற பிறகு தனது பைக் மாடல்களை அதிகப்படுத்தும் முயற்சிகளை ஹீரோ மேற்கொண்டு வருகிறது. மேலும், வரும் 2014ம் ஆண்டு ஹோண்டா தொழில்நுட்பத்தை ஹீரோ பயன்படுத்த முடியும்.

Hero Ignitor

எனவே, ஹோண்டாவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட இக்னைட்டர் என்ற 125 சிசி பைக் மாடலை கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ மோட்டோ கார்ப் காட்சிக்கு வைத்திருந்தது.

இந்த பைக்கை தற்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஹீரோ மோட்டோ கார்ப். ஹோண்டா விற்பனை செய்து வரும் ஸ்டன்னர் பைக்கின் ஸ்டிக்கரை மட்டும் மாற்றி வந்துள்ள இந்த பைக் வடிவமைப்பில் மட்டுமல்ல, எஞ்சினும் ஒன்றுதான். ஸ்டன்னரில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சினை ட்யூனிங் செய்து இதில் பொருத்தியிருக்கிறது ஹீரோ.

இந்த எஞ்சின் 11 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். ஆனால், இக்னைட்டர் எஞ்சின் குறைந்த டார்க்கில் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது. நம் நாட்டு சாலைநிலைகளுக்கு ஏற்ற ஹைட்ராலிக் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனை கொண்டிருக்கிறது.

தனித்தனியான ஸ்பிளிட் இருக்கைகள், இரட்டை வண்ணத்தில் மிளிரும் கண்ணாடிகள், இரட்டை வண்ண பூச்சு கொண்ட எஞ்சின் கவுல், வண்டியின் கலரிலேயே கிராப் ரெயில், அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட ஷாக் அப்சார்பர்கள் என கூடுதல் அம்சங்கள் ஏராளமாக இருக்கின்றன.

டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், அனலாக் டாக்கோ மீட்டர், அசத்தலான ஹெட்லைட் வடிவமைப்பு உள்ளிட்டவை குறிப்பிட்டு கூறலாம். பியர்ல் ஒயிட், ஸ்போர்ட்ஸ் ரெட், வைப்ரன்ட் ப்ளூ, பாந்தர் பிளாக் மெட்டாலிக் ஆகிய 4 கலர்களில் புதிய இக்னைட்டர் கிடைக்கும்.

ரூ.55,900 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய இக்னைட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 6, 2012, 13:30 [IST]
English summary
Hero Motocorp has launched the Igniter 125cc motorbike at Rs 55,900 (ex-showroom Delhi). Here is some details about new Hero Ignitor.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+