மேஸ்ட்ரோ பவர் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்த ஹீரோ

110 சிசி திறன் கொண்ட புதிய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரை ஹீரோ மோட்டோ கார்ப் கோவாவில் முதலில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இம்பல்ஸ் பைக்கை அடுத்து முழுக்க முழுக்க ஹீரோ பிராண்டில் வரும் இரண்டாவது டூ வீலர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஹீரோ ஹோண்டாவிலிருந்து ஹோண்டா விலகியதைத் தொடர்ந்து ஹீரோ நிறுவனம் தனித்து மார்க்கெட்டில் களமிறங்கியுள்ளது. ஹீரோ மோட்டோ கார்ப் என பிராண்டு பெயரை மாற்றியது.

மேலும், தனது பிராண்டில் இம்பல்ஸ் மற்றும் மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்களை லண்டனில் நடந்த பிராண்டு அறிமுக விழாவின்போது பார்வைக்கு வைத்திருந்தது. இதில், இம்பல்ஸ் ஏற்கனவே விறபனைக்கு வந்துவிட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது மேஸ்ட்ரோ ஸ்கூட்டரும் விற்பனைக்கு வந்துள்ளது.

கோவாவில் முதலில் மேஸ்ட்ரோ ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஹீரோ மோட்டோ கார்ப். இந்த ஸ்கூட்டரில் 8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 109 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஹோண்டா ஆக்டிவா வாரிசு என்பதால் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது.

தவறுதலாக முன் பக்க பிரேக்கை வேகமாக பிடித்தால் கூட பின்பக்க பிரேக்கும் சேர்ந்து பிடித்து வண்டியின் பேலன்ஸ் குறையாமல் பார்த்துக்கொள்வதுதான் காம்பி பிரேக்கிங் சிஸ்டத்தின் கூடுதல் சிறப்பு. இதில், டிஜிட்டல் மற்ரும் அனலாக் ஸ்பீடோமீட்டர் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டிருப்பது கவரும் அம்சம்.

நாட்டின் இருசக்கர வாகன உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்கூட்டர் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. கோவாவில் முதலில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் விரைவில் நாடு முழுவதும் உள்ள ஹீரோ மோட்டோ கார்ப் ஷோரூம்களில் விற்பனைக்கு வருகிறது.

நீலம், பச்சை, சிவப்பு, வெள்ளை, சில்வர் மற்றும் கருப்பு ஆகிய 6 விதமான வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது மேஸ்ட்ரோ. கோவாவில் ரூ.48,280 விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 2, 2012, 9:56 [IST]
English summary
Country's largest two wheeler manufacturer Hero moto corp has launched Maestro scooter in Goa at Rs.48,280. The maestro is equipped with 109 cc engine and it churn out 8 bhp power.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+