பெங்களூரில் இக்னைட்டரை விற்பனைக்கு கொண்டு வந்த ஹீரோ
ரூ.56,747 விலையில் பெங்களூரில் இக்னைட்டர் பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.
ஸ்டன்னர் என்ற பெயரில் ஹோண்டா விற்பனை செய்து வரும் பைக்கை இக்னைட்டர் என்ற பெயரில் தனது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஹீரோ நிறுவனம்.

125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இக்னைட்டர் அதிகபட்சமாக 11 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். ஏற்கனவே, வட மாநிலங்களில் விற்பனைக்கு கொண்டு வந்துவிட்ட இக்னைட்டர் பைக்கை தற்போது பெங்களூரிலும் அறிமுகம் செய்துள்ளது ஹீரோ.
பெங்களூர் தவிர, கர்நாடகத்தில் 15 நகரங்களில் இக்னைட்டர் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டு வேரியண்ட்களில் இக்னைட்டர் கிடைக்கும். பேஸ் வேரியண்ட்டில் டிரம் பிரேக் கொண்டதாக இருக்கும். டாப் வேரியண்ட் முன்பக்கம் டிஸ்க் பிரேக் கொண்டதாக இருக்கும்.
பாந்தர் பிளாக், ஸ்போர்ட்ஸ் ரெட், பியர்ல் ஒயிட் மற்றும் வைப்ரன்ட் புளூ ஆகிய 4 வண்ணங்களில் இக்னைட்டர் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








