புதிய பார்ட்னருடன் இணைந்து சூப்பர் பைக் தயாரிக்க ஹீரோ ஆயத்தம்

Hero Super Bike
முதலிடத்தை நோக்கி ஹோண்டா காய் நகர்த்தி வருவதை முறியடிக்கும் வகையில், தனது புதிய பார்ட்னரான எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்துடன் இணைந்து சூப்பர் பைக்கை தயாரிக்க உள்ளது ஹீரோ மோட்டோ கார்ப்.

கடந்த ஆண்டு ஹோண்டா கழன்று கொண்டதையடு்த்து, தனது எதிர்கால திட்டங்களை மிக மிக கவனமாகவும், தீவிரமாகவும் செயல்படுத்த துவங்கியுள்ளது ஹீரோ.

இருசக்கர வாகன உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் தனது இடத்தை குறிவைத்து ஹோண்டா காய் நகர்த்தி வருவதை முறியடிக்கும் வகையில், தன்னுடைய புதிய தயாரிப்புகள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறது ஹீரோ.

மேலும், ஹோண்டாவுடன் வர்த்தகம் செய்து வந்தவரை இருந்த மார்க்கெட் நிலவரம் வேறு, தற்போதைய மார்க்கெட் நிலவரம் வேறாக இருக்கிறது. இளைஞர்களின் கவனம் தற்போது அதிக திறன் கொண்ட பைக்குகளின் மீது மாறியுள்ளதால் அதை நிறைவேற்றும் வகையில் புதிய தயாரிப்புகளை வெளியிட இருக்கிறது.

இந்த நிலையில், தனது புதிய பார்டனரான அமெரிக்காவின் எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்துடன் இணைந்து புதிய சூப்பர் பைக்கை தயாரிக்க உள்ளது ஹீரோ.

இதுகுறித்து ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால் கூறியதாவது:

"அடுத்த தலைமுறையை கவரும் வகையில் புதிய தயாரிப்புகளை வெளியிட இருக்கிறோம். எங்களது புதிய பார்ட்னர் எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்துடன் இணைந்து அதிக சக்திகொண்ட சூப்பர் பைக் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இதன்மூலம், இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்," என்றார்.

பாரம்பரியம் மிக்க ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் சிறந்த தயாரிப்புகளை இணைந்து வழங்குவோம்," என்று எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்தின் சிஇஓ எர்க் எப் புயெல் தெரிவித்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 25, 2012, 15:05 [IST]
English summary
Country's leading two wheeler manufacturer Hero moto corp to make super bike alliance with new partner Eric buell racing. “The Indian two-wheeler industry is set to evolve and it is only natural that as the a market leader, we are driving this change,says Hero Moto corp MD Pawan munjal.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+