டுகாட்டி நிறுவனத்தை வாங்குவதற்கு ஹீரோ மோட்டோ கார்ப் தீவிரம்

Ducati Panigale
டுகாட்டி நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்சிகளை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் துவங்கியுள்ளதா தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூப்பர் பைக் தயாரிப்பில் பிரபலமான டுகாட்டி நிறுவனம் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த நிறுவனத்தை வாங்குவதற்கு உலக அளவில் பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் போட்டா போட்டியில் இறங்கியுள்ளன.

மஹிந்திராவும் கூட டுகாட்டியை வாங்குவதற்கு களத்தில் இறங்கியதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த தகவலை மஹிந்திரா மறுத்துவிட்டது.

இந்த நிலையில், இருசக்கர வாகன தயாரிப்பில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் டுகாட்டியை வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு ஹீரோ ஹோண்டாவிலிருந்து ஹோண்டா கழன்று கொண்டதால், சரியான பார்ட்னரை சேர்த்து தொழிலை அபிவிருத்தி செய்ய ஹீரோ தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த எரிக் புயெல் நிறுவனத்தை பார்ட்னராக இணைத்துக்கொண்டது.

எரிக் புயெல் மூலம் சூப்பர் பைக்குகளை தயாரிக்க ஹீரோ திட்டமிட்டுள்ளது. மேலும், எரிக் புயெலின் சிண்டு தனது கையில் இருக்க வேண்டுமென்பதற்காக, அந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை வாங்கவும் ஹீரோ முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், டுகாட்டியையும் கையகப்படு்த்த ஹீரோ மோட்டோ கார்ப் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம், எதிர்காலத்துக்கு தனக்கு தேவையான சிறந்த தொழில்நுட்ப பகிர்மானத்தை பெற முடியும் என்று ஹீரோ நம்புகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 7, 2012, 14:29 [IST]
English summary
The country's leading two wheeler maker Hero moto corp is planning to buy Ducati motorcycle company. The company is now taking steps and talking with Ducati management, says reports.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+