6 வது மாதமாக 5 லட்சத்திற்கு மேல் டூ வீலர்களை விற்பனை செய்த ஹீரோ

Karizma ZMR
நாட்டின் நம்பர் ஒன் இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தொடர்ந்து 6 வது மாதமாக 5 லட்சத்திற்கும் மேல் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து மார்க்கெட்டில் நம்பர் ஒன் என்பதை நிரூபித்துள்ளது.

கடந்த மாதம் 5,20,272 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து 11.5 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது ஹீரோ மோட்டோ கார்ப். தொடர்ந்து 6 வது மாதமாக ஹீரோவின் இருசக்கர வாகன விற்பனை 5 லட்சம் என்ற எண்ணிக்கை கடந்து வருகிறது.

மேலும், கடந்த ஆண்டு ஏப்ரலிலிருந்து கடந்த மாதம் வரை அந்த நிறுவனம் 51,83,440 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பஜாஜ் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் ஹீரோவை விற்பனையில் முந்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

மேலும், புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதைக்கருத்தில்க்கொண்டு ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனமும் அடுத்தடுத்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கூட ஸ்கூட்டர் உள்பட 3 புதிய இருசக்கர வாகனங்களை ஹீரோ அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, February 3, 2012, 18:19 [IST]
English summary
The country's largest Two wheeler maker Hero moto corp post goog sales growth in January. The company sold 5,20,272 units in the previous month and sales up 11.5% compared with last year same month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+