பைக் விலையை ரூ.1000 வரை உயர்த்திய ஹீரோ மோட்டோ கார்ப்

நாட்டின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டோ கார்ப் விளங்குகிறது.
இந்த நிலையில், உற்பத்தி செலவீனம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பைக்குகளின் விலையை ரூ.500 முதல் ரூ.1000 வரை உயர்த்தியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாடல்களுக்கு தக்கவாறு இந்த விலை உயர்வு இருக்கும் என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடேயே, கடந்த மாதம் அந்த நிறுவனம் 5,49,625 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனையை கணக்கிடுகையில், இது 7 சதவீதம் உயர்வாகும். அந்த நிறுவனத்தின் விற்பனை கடந்த மாதமும் 5 லட்சத்தை தாண்டியது.
இதனிடையே, எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு தனது 3 ஆலைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்க உள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








