ரூ.2,575 கோடியில் 2 புதிய ஆலைகள்: ஹீரோ மோட்டோகார்ப் அறிவிப்பு

மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் அடுத்த கட்ட வர்த்தகத்துக்கான விரிவாக்கப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
தவிர, எதிர்கால தேவையை சமாளிக்கும் விதமாக 2 புதிய ஆலைகளையும் கட்ட தீர்மானித்துள்ளது. இதற்காக, ரூ.2,575 கோடியை அந்த நிறுவனம் முதலீடு செய்கிறது. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இந்த புதிய ஆலைகள் கட்டப்பட உள்ளன.
அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2014ம் ஆண்டிலோ செயல்பாட்டுக்கு வரும் இந்த புதிய ஆலைகள் ஆண்டுக்கு 7.5 லட்சம் மோட்டோர்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்த இரு ஆலைகளும் செயல்பாட்டுக்கு வந்தால் ஹீரோவின் ஆலைகள் எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்கும். மேலும், புதிய மோட்டார்சைக்கிள்கள் வடிவமைப்புக்காக ரூ.400 கோடியில் புதிய ஆராய்ச்சி மையத்தையும் அந்த நிறுவனம் அமைக்கிறது.
இந்த தகவல்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சால் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








