டாப் கியரில் செல்லும் ஹீரோ மோட்டோ கார்ப் விற்பனை

இதுவரை இல்லாத அளவாக கடந்த மாதம் 5,56,664 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம். மேலும், தொடர்ந்து 10 வது மாதமாக ஹீரோ மோட்டோ கார்ப் விற்பனை 5 லட்சத்தை கடந்துள்ளது.

கடந்த ஆண்டு மேமாதத்தில் 5,00,234 இருசக்கர வாகனங்களை ஹீரோ விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த மாதம் விற்பனை 5,56,664 என்று பதிவாகி 11.3 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. ஹோண்டா நிறுவனம் பிரிந்து விட்ட நிலையிலும், ஹீரோவின் விற்பனை தொடர்ந்து நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.

இதுகுறித்து ஹீரோ மோட்டா கார்ப் நிறுவனத்தின் துணை தலைவர் அனில் துவா கூறுகையில்,"தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.

எங்களது சேவையை மேம்படு்த்தும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய மாடல்களை அறிமுகம் செய்வோம். மேலும், கிராமப் புற மார்க்கெட்டில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.

தற்போது நாடு முழுவதும் 5,000 வாடிக்கையாளர் சேவை மையங்கள் இருக்கின்றன. இந்த ஆண்டுக்குள் புதிதாக 400 சேவை மையங்களை திறக்கவும் முடிவு செய்துள்ளோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 2, 2012, 13:01 [IST]
English summary
Hero MotoCorp has reported its best-ever monthly sales 5,56,644 two-wheelers in May, a growth of 11.3 per cent over the corresponding month last year when the company had sold 5,00,234 units.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+