பன்னாட்டு நிறுவனமாக உருவெடுக்கும் ஹீரோ மோட்டோ கார்ப்

இருசக்கர வாகன உற்பத்தியில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு ஹோண்டா பிரிவு காரணமாக தொழில்நுட்ப ரீதியிலான வெற்றிடத்தை நிரப்புவதற்கான முயற்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த எரிக் புயெல் நிறுவனத்தின் உதவியுடன் சூப்பர் பைக் தயாரிப்பு மற்றும் பைக் ரேஸிங் துறையில் கால் பதிக்க இருக்கிறது ஹீரோ மோட்டோ கார்ப். இவை தவிர, ஏவிஎல் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் எஞ்சின் பெறவும் முடிவு செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது புதிய நம்பிக்கை பெற்றுள்ள ஹீரோ மோட்டோ கார்ப் அடுத்து சர்வேத அளவில் பெரிய நிறுவனமாக உருவெடுக்கும் பணிகளை துவங்கியுள்ளது. ஆப்ரிக்க மார்க்கெட்டில் கால் பதிக்க திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம் அங்கு இருசக்கர ஆலைகளை கட்டவும் தீர்மானித்துள்ளது.
இந்திய-ஆப்ரிக்க இடையிலான வர்த்தக மாநாட்டில் பேசிய ஹீரோ மோட்டோ கார்ப்பரேட் சேவைப் பிரிவு தலைவர் சுனில் காந்த் முஞ்சால் இத்தகவலை தெரிவித்தார். அப்போது, வேகமாக வளர்ந்து வரும் ஆப்ரிக்க மார்க்கெட்டுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
அங்கு ஆலை அமைத்து பைக் உற்பத்தி செய்யவும் முடிவு செய்துள்ளோம். தவிர, சில நாடுகளுக்கு இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.
ஹோண்டா விலகியதிலிருந்து ஏற்றுமதியை ஹீரோ குறைத்துவிட்டது. இந்த நிலையில், புதிய பார்ட்னர்களின் நம்பிக்கையுடன் மீண்டும் தனது சொந்த பிராண்டில் பைக்குகளை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளை அந்த நிறுவனம் தற்போது முடுக்கிவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








