110 சிசி எஞ்சினுடன் புதிய பேஸன்: ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம்
ரூ.46,800 ஆரம்ப விலையில் 110 சிசி திறன் கொண்ட புதிய பேஸன் எக்ஸ் ப்ரோ பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் இன்று விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. செல்ப் ஸ்டார்ட்டருடன் ஸ்போக்ஸ் மற்றும் அலாய் வீல் மாடல்களில் புதிய பேஸன் எக்ஸ் ப்ரோ கிடைக்கும்.
இந்த புதிய பைக் 110 சிசி மார்க்கெட்டில் ஹீரோவுக்கு முக்கிய இடத்தை பெற்றுத் தரும் அம்சங்களை கொண்டிருக்கிறது. மொத்தம் 5 வேரியண்ட்களில் 8 கலர்களில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய பேஸனின் வேரியண்ட் வாரியாக விலை மற்றும் இதர விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்
பெட்ரோல் டேங்க் பாடி பேனல்கள், இன்டிகேட்டர் விளக்குகள், புதிய ஹெட்லைட் ரிஃபலெக்டர் ஆகியவை பேஸன் ப்ரோவையும் இந்த புதிய பேஸன் எக்ஸ் ப்ரோவையும் வித்தியாசப்படுத்துகிறது.

இன்டிகேட்டர் லைட்
இன்டிகேட்டர் விளக்குகளின் வடிவமைப்பு மாற்றம் கண்டிருக்கிறது. இதுவும் புதிய பேஷனுக்கு கூடுதல் கவர்ச்சி. மற்றபடி பழைய பேஷன் ப்ரோ போன்றே இருக்கிறது.

கவர்ச்சிக்கு இவை...!!
சில்வர் பூச்சு கொண்ட சைலன்சர் கார்டு கவர்ச்சியாக இருக்கிறது. எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியும், காஸ்ட் வீல்களும் கூடுதல் அம்சங்கள்.

எஞ்சின்
ஹோண்டா ட்விஸ்ட்டர், ட்ரீம் யுகாவிலும் பொருத்தப்பட்டிருக்கும் அதே 110 சிசி எஞ்சின்தான் ஹீரோ பேஷன் எக்ஸ் ப்ரோவிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 8.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

சஸ்பென்ஷன்
முன்புறம் டெலிஸ்கோப்பிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும், பின்புறம் ஸ்விங் ஆர்ம் அட்ஜெஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்களும் பொருத்தப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி
புதிய பேஸன் கிக் ஸ்டார்ட் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் மாடல்களில் கிடைக்கும்.

டிஸ்க் பிரேக்
முதன்முறையாக பேஸன் வரிசையில் டிஸ்க் பிரேக்குடன் வந்திருக்கிறது. முன்புறம் 240 மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்புறம் டிரம் பிரேக்கையும் கொண்டிருக்கிறது.

பெட்ரோல் டேங்க்
9.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க்கை கொண்டிருக்கிறது.

முன்பதிவு துவக்கம்
புதிய பேஸன் எக்ஸ் ப்ரோவுக்கு நாடு முழுவதும் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் ஷோரூம்களில் முன்பதிவு திறக்கப்பட்டுவிட்டது.

விலை
கிக் ஸ்டார்ட் ஸ்போக் வீல்: ரூ. 46,800
கிக் ஸ்டார்ட் காஸ்ட் வீல் : ரூ. 47,800
செல்ஃப், ஸ்போக் வீல் : ரூ.48,800
செல்ஃப் காஸ்ட் வீல் : ரூ. 49,800
டிஸ்க், செல்ஃப் காஸ்ட் : ரூ. 51,800
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் விலை பட்டியலில் முதல் 4 வேரியண்ட்கள் டிரம் பிரேக்கையும், கடைசி வேரியண்ட் டிஸ்க் பிரேக்கையும் கொண்டது. அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை.


Click it and Unblock the Notifications








