முதலில் ஹோண்டாவின் 3 மாடல்களுக்கு விடை கொடுக்கும் ஹீரோ

ஹீரோ ஹோண்டாவிலிருந்து கடந்த ஆண்டு ஹோண்டா விலகியது. இருந்தாலும் ஒப்பந்தத்தின்படி, வரும் 2014ம் ஆண்டு வரை ஹோண்டாவிடமிருந்து தொழில்நுட்ப உதவியை ஹீரோ பெற முடியும். இதனால், ஹோண்டாவின் தயாரிப்புகளை பெயரை மாற்றி தனது சொந்த பிராண்டில் ஹீரோ விற்பனை செய்து வருகிறது.
ஹோண்டா பிரிந்த பின்னர் கடந்த ஆண்டு இம்பல்ஸ் பைக்கையும், நடப்பு ஆண்டில் இக்னைட்டர் மற்றும் மேஸ்ட்ரோ ஸ்கூட்டரையும் ஹீரோ விற்பனைக்கு கொண்டு வந்தது. விற்பனைக்கு வந்து ஓர் ஆண்டு கூட ஆகாத நிலையில், மேற்கண்ட 3 மாடல்களுக்கும் விடை கொடுக்க ஹீரோ முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த எரிக் புயல் மற்றும் இரண்டு ஐரோப்பிய நிறுவனங்களுடன் ஹீரோ தொழில்நுட்பத்திற்காக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மேலும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 400 கோடி முதலீட்டில் புத்தம் புதிய இருசக்கர வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்துள்ளது.
எதிர்காலத்தில் தனது சொந்த தொழில்நுட்பத்தில் புதிய பைக்ககுகளை வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வருவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே, முதலாவதாக மேற்கண்ட 3 மாடல்களுக்கும் விடை கொடுக்க ஹீரோ முடிவு செய்துள்ளது. அதேநேரம், அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களான ஸ்பிளன்டர், பேஷன் ஆகிய பைக்குகள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுமா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.


Click it and Unblock the Notifications








