ஹீரோ பேஷன் எக்ஸ் ப்ரோ உற்பத்தி துவக்கம்: தீபாவளிக்கு ரிலீஸ்
போட்டியை சமாளிக்க புதிய புதிய மாடல்களை ஹீரோ தொடர்ந்து அறிமுகப்படு்த்தி வருகிறது. இந்த வரிசையில் தற்போது 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய பேஷன் பைக்கை ஹீரோ விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்பிளென்டருக்கு அடுத்து வாடிக்கையாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட மாடலான பேஷனின் இந்த புதிய பவர்ஃபுல் மாடல் நிச்சயம் பெரும் வரவேற்பை பெறும் என்று நம்புகிறது ஹீரோ.
இந்த புதிய பைக்கின் உற்பத்தி சமீபத்தில் துவங்கப்பட்டு விட்டதாக ஹீரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் தீபாவளி பண்டிகையையொட்டி இந்த புதிய பவர்ஃபுல் பேஷன் பைக் மார்க்கெட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேஷன் பைக்கின் சில முக்கிய அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு
பெட்ரோல் டேங்க் ஸ்கூப், இன்டிகேட்டர் விளக்குகளை தவிர, கண்ணாடி, ஹெட்லைட் உள்ளிட்ட அனைத்திலும் மாற்றம் இல்லை. சாட்சாத் 100சிசி பேஷன் ப்ரோதான்.

பெட்ரோல் டேங்க் ஸ்கூப்
பெட்ரோல் டேங்கின் பக்கவாட்டில் இருபக்கமும் கூடுதல் கவர்ச்சியை தரும் வகையில் ஸ்கூப் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இன்டிகேட்டர் லைட்
இன்டிகேட்டர் விளக்குகளின் வடிவமைப்பு மாற்றம் கண்டிருக்கிறது. இதுவும் புதிய பேஷனுக்கு கூடுதல் கவர்ச்சி. மற்றபடி பழைய பேஷன் ப்ரோ போன்றே இருக்கிறது

டிஸ்க் பிரேக்
பேஷன் எக்ஸ் ப்ரோவின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று முன்புறம் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், சில்வர் பூச்சு கொண்ட சைலன்சர் கார்டு கவர்ச்சியாக இருக்கிறது. எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியும், காஸ்ட் வீல்களும் கூடுதல் அம்சங்கள்.

110சிசி எஞ்சின்
ஹோண்டா ட்விஸ்ட்டர், ட்ரீம் யுகாவிலும் பொருத்தப்பட்டிருக்கும் அதே 110 சிசி எஞ்சின்தான் ஹீரோ பேஷன் எக்ஸ் ப்ரோவிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 8.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.


Click it and Unblock the Notifications








