எந்த இடத்துலயும் ஹோண்டா பெயர் இருக்கக் கூடாது: ஹீரோ அதிரடி

CBZ
ஹோண்டா தொழில்நுட்பத்தை பெற்றாலும் கூட எந்த இடத்திலும் ஹோண்டா பெயர் இருக்கூடாது என்பதில் ஹீரோ தீர்மானமாக இருக்கிறது. எனவே, ஹோண்டா பெயர் இல்லாமல் பைக்குகளை அறிமுகப்படுத்துவதை ஹீரோ தீவிரமாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஹீரோ ஹோண்டா குழுமத்திலிருந்து ஹோண்டா பிரிந்து சென்றது. இதையடுத்து, ஹீரோ நிறுவனம் மார்க்கெட்டில் தனி ஆவர்த்தனம் துவங்கியுள்ளது. புதிய தொழில்நுட்ப பார்ட்னர்களுடன் கூட்டு சேர்ந்து வரும் அந்த நிறுவனம் தற்போது புதிய பைக் மாடல்களையும் அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், தனது தயாரிப்புகளில் ஹோண்டா பெயர் இருப்பதை ஹீரோ விரும்பவில்லை. வரும் 2014ம ஆண்டு வரை ஹீரோ ஹோண்டா பிராண்டை பயன்படுத்தவும், ஹோண்டாவிடமிருந்து தொழில்நுட்பத்தை பெறுவதற்கும் ஹீரோ உரிமை வாங்கியுள்ளது. இருப்பினும், தனது தயாரிப்புகளில் ஹோண்டாவின் பெயர் இடம்பெறுவதை ஹீரோ விரும்பவில்லை.

ஸ்பிளன்டர் உள்ளிட்ட பைக்குகள் ஹோண்டா பெயர் இல்லாமல் ஹீரோ என்ற பிராண்டில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதேபோன்று, அனைத்து பைக் மாடல்களிலும் ஹோண்டா பெயரை நீக்கிவிட ஹீரோ முடிவு செய்துள்ளது. எனவே, ஹீரோ ஹோண்டா பிராண்டில் இனி பைக்குகள் வராது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 12, 2012, 9:40 [IST]
English summary
World largest two wheeler maker Hero MotoCorp is in the process of rolling out all its models under the "Hero" brand name, two years ahead of the deadline.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+