வரும் 15ந் தேதி அறிமுகமாகும் ஹோண்டாவின் புதிய 110சிசி பைக்

நம் நாட்டு மார்க்கெட்டில் 100 சிசி முதல் 125 சிசி வரையிலான பைக்குகளுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. இதனால், அனைத்து நிறுவனங்களும் புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துவதில் சுறுசுறுப்பாக இறங்கியுள்ளன.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் சுஸுகி நிறுவனம் ஹயாட்டே என்ற புதிய 110 சிசி பைக்கை அறிமுகம் செய்தது. இந்தநிலையில், ஹோண்டா நிறுவனமும் புதிய 110 சிசி பைக்கை வரும் 15ந் தேதி முதல் விற்பனைக்கு கொண்டு வருகிறது.
ட்ரீம் யுகா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய பைக் ஹோண்டா ஷைனைவிட குறைந்த விலையில் விற்பனைக்கு வர இருப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பார்ப்பதற்கு ஷைனை போல இருந்தாலும் சில மாறுதல்கள் இருக்கும்.
மேலும், ஷைனை விட அதிக மைலேஜ் கொடுக்கும் என்று ஹோண்டா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய பைக் ஹோண்டாவின் விற்பனையை புதிய உயரத்திற்கு இட்டு செல்லும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








