ஹோண்டா ட்ரீம் யுகாவுக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு
ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய ட்ரீம் யுகா பைக்குக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இரண்டு மாதங்களில் 30,000 பைக்குகள் விற்பனையாகியிருக்கிறது.
இருசக்கர வாகன மார்க்கெட்டில் தனது விற்பனை வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க புத்தம் புதிய 110சிசி பைக்கை ஹோண்டா கடந்த இரு மாதங்களு்ககு முன் விற்பனைக்கு கொண்டு வந்தது. லிட்டருக்கு 70கிமீ மைலேஜ் தரும் என்று அறிவிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் ட்ரீம் யுகாவுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

நாட்டின் 20 முக்கிய நகரங்களி்ல் முதலில் ட்ரீம் யுகாவை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வந்தது. தற்போது படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் ட்ரீம் யுகா அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.ஹோண்டா எதிர்பார்த்தது போலவே ட்ரீம் யுகா பைக்குக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இரண்டு மாதங்களில் மட்டும் 30,000 ட்ரீம் யுகா பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விற்பனைக்கு வரும்போது இந்த எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் ஸ்போக் வீல், செல்ப் ஸ்டார்ட் கொண்ட மாடல் ரூ.52,824 எக்ஸ்ஷோரூம் விலையிலும், அலாய் வீல், செல்ப் ஸ்டார்ட் கொண்ட மாடல் ரூ.56,692 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








