சென்னையில் ஹோண்டா ட்ரீம் யுகா விலை மற்றும் புக்கிங் விபரம்
ஹீரோ ஹோண்டாவிலிருந்து கடந்த ஆண்டு பிரிந்து விட்ட ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் வேகமாக வளர்ந்து வருகிறது. தனது விற்பனை வளர்ச்சியை அதிகப்படுத்திக் கொள்ளும் விதமாக புத்தம் புதிய 110 சிசி பைக்கை கடந்த திங்கட்கிழமை அறிமுகம் செய்தது.
ட்ரீம் யுகா என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய மோட்டார்சைக்கிளுக்கு சென்னையில் தற்போது புக்கிங் செய்யப்படுகிறது. செல்ப் ஸ்டார்ட் வசதிகொண்ட மாடல் ரூ.57,000 ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆக்சஸெரீஸ்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை தனியாக செலுத்த வேண்டியிருக்கும். இந்த புதிய மோட்டார்சைக்கிளுக்கு ரூ.1,000 முன்பணம் பெற்றுக் கொண்டு முன்பதிவு செய்யப்படுகிறது.
புக்கிங் செய்து ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்களுக்குள் ட்ரீம் யுகா டெலிவிரி கொடுக்கப்படும் என்று டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(ட்ரீம் யுகா கேலரிக்கு செல்ல இங்கே சொடுக்கவும்)


Click it and Unblock the Notifications









